ஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

ஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

ஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

எழுத்தாளர் Bella Dalima

10 Oct, 2020 | 5:06 pm

Colombo (News 1st) ஆர்மேனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

Nagorno-Karabakh பிராந்தியம் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் மோதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சுமார் 10 மணித்தியால பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த பிராந்தியத்தில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் Sergei Lavrov வௌியிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்குமிடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Nagorno-Karabakh பிராந்திய உரிமம் தொடர்பில் அசர்பைஜானும் ஆர்மேனியாவும் மோதிக்கொண்டதில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்