மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்

by Staff Writer 09-10-2020 | 3:21 PM
Colombo (News 1st) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேறு பொலிஸ் நிலையங்களில் இருந்து 80 பேர் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். களுத்துறை, நிக்கவெரட்டிய, பஹலகம, பொரலந்தை, குண்டசாலை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களே இவ்வாறு சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொற்று நீக்க நடவடிக்கைகளையடுத்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் மீள திறக்கப்பட்டதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார். மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஒருவருக்கு நேற்று (08) COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.