லிந்துலையில் மீன்பிடிப் பூனையில் உடலம் கண்டுபிடிப்பு

by Staff Writer 09-10-2020 | 7:45 PM
Colombo (News 1st) லிந்துலையில் உயிரிழந்த மீன்பிடிப் பூனையொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள குடியிருப்பு பகுதிக்கு முன்பாக மீன்பிடிப் பூனையொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற லிந்துலை பொலிஸார் இந்த விடயம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீன்பிடிப் பூனையின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த மீன்பிடிப் பூனை விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்