சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2020 | 3:30 pm

Colombo (News 1st) சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

தற்போது அந்த குழந்தை IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளது.

காய்ச்சல் காரணமாக இந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தையொன்றின் தந்தையொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.

கண்டியை சேர்ந்த குறித்த குழந்தை கடந்த இரண்டரை மாதங்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும், தற்போது அவர்கள் கொட்டிகாவத்தை பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.

குழந்தையின் தந்தை இடைக்கிடை வைத்தியசாலைக்கு வருகை தந்தமையால், அவர்கள் இருந்த விடுதியிலுள்ள அனைவரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்