மருத்துவமனையில் இருந்து வௌியேறினார் விஜயகாந்த்

மருத்துவமனையில் இருந்து வௌியேறினார் விஜயகாந்த்

மருத்துவமனையில் இருந்து வௌியேறினார் விஜயகாந்த்

எழுத்தாளர் Bella Dalima

09 Oct, 2020 | 5:07 pm

உடல் நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வௌியேறியுள்ளார்.

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இருவரும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கடந்த 2 ஆம் திகதி வௌியேறினர்.

இதையடுத்து, விஜயகாந்த் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின்னர் விஜயகாந்த் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று வௌியேறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்