மந்தகதியில் பிரித்தானிய பொருளாதாரம்

மந்தகதியில் பிரித்தானிய பொருளாதாரம்

மந்தகதியில் பிரித்தானிய பொருளாதாரம்

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2020 | 4:36 pm

Colombo (News 1st) பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றின் பின்னர் மந்தமடைந்துள்ளது.

உணவகங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தின் கீழ், பிரித்தானிய பொருளாதாரம் ஆகஸ்ட் மாதம் வழமை நிலைக்குத் திரும்பி வந்ததுடன், 2.1வீத வளர்ச்சியைக் காண்பித்தது.

இருப்பினும், இந்த வளர்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய பொருளாதாரம் கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்த பொருளாதார நிலையைக் காட்டிலும் 9.2 வீதம் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்