பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: கல்வி அமைச்சு

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: கல்வி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2020 | 8:39 pm

Colombo (News 1st) ஐந்தாம் தர புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளில் மாற்றமில்லை எனவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட இடங்களுக்கு விசேட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.

மேலதிக பரீட்சை மத்திய நிலையங்களை இன்று காலை ஸ்தாபித்ததாகவும் அவர் கூறினார்.

பரீட்சைக்கு தோற்றும் இடங்கள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தௌிவூட்டினார்.

கனேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கலேஹிட்டியாவ மத்திய வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சை நிலையமாகத் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

யக்கல , கம்பஹா மற்றும் வீரகுல பகுதிகளுக்காக மிரிஸ்வத்தை கெப்பிட்டிபொல மகா வித்தியாலயம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்கு கிரிந்திவெவ மத்திய மகா வித்தியாலயமும் வெலிவேரியா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெலிவேரியா மத்துமபண்டார மகா வித்தியாலயமும் தொம்பே மற்றும் பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு பத்மாவதி மகா வித்தியாலயமும் நிட்டம்புவ மற்றும் வெயாங்கொடை பிரிவுகளுக்கு வெயாங்கொடை ஜனாதிபதி மகா வித்தியாலயமும் மீரிகம மற்றும் பல்லேவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மீரிகம டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேச மாணவர்களுக்காக மினுவாங்கொடை ஜனாதிபதி பாடசாலையும் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு ஞானோதய பாடசாலையும் சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு வெலிக்கம்மபர மகா வித்தியாலயமும் ஜா எல மற்றும் கந்தானை மாணவர்களுக்கு ஜா-எல புனித மரியாள் வித்தியாலயமும் களனி பிரதேசத்திற்கு கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, உயர்தரப் பரீட்சைக்காக 12 பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கனேமுல்ல – பூகொடை ஶ்ரீ விஜய மகா வித்தியாலயம் , யக்கல, கம்பஹா மற்றும் வீரகுல பகுதிகளுக்கு மிரிஸ்வத்தை கெப்பிட்டிபொல மகா வித்தியாலயமும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு கிரிந்திவெவ மத்திய மகா வித்தியாலயமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்துவதற்கும் பஸ்களை நிறுத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மாத்திரமே அங்கு போக்குவரத்து சேவை இடம்பெறும் எனவும் சட்டத்தரணி ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

மாணவர்களின் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை ஊடரங்கு அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்