பிரேஸிலில் தொற்றாளர் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது

by Chandrasekaram Chandravadani 08-10-2020 | 11:52 AM
பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது Colombo (News 1st) பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, கொரோனா தொற்றுக்குள்ளாகி 150,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாத்திரம் 31,553 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் COVID - 19 தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அடுத்ததாக பிரேஸில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.