மதுபானம் விற்பனை செய்யும் உணவகங்களை மூடுமாறு உத்தரவு

மதுபானம் விற்பனை செய்யும் உணவகங்களை மூடுமாறு உத்தரவு

மதுபானம் விற்பனை செய்யும் உணவகங்களை மூடுமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 1:56 pm

Colombo (News 1st) மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆரியதாச போதரகம தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்புப்பிரிவு வழங்கும் ஆலோசனைக்கு அமைவாக இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்