நாட்டுக்கு வருகை தரும் சீன அதிகாரிகள் குழு

நாட்டுக்கு வருகை தரும் சீன அதிகாரிகள் குழு

by Staff Writer 08-10-2020 | 11:03 AM
Colombo (News 1st) சீன உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று இன்று (08) நாட்டுக்கு வருகை தரவுள்ளது. முன்னாள் சீன வௌிவிவகார அமைச்சர் மற்றும் தற்போதைய கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரின் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வௌிவிகார அமைச்சு அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் நாளை (09) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸூக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு என்பன தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் சீன உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.