நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 9:17 am

Colombo (News 1st) Update: 9.15 am ; கம்பஹா மாவட்டத்தை தவிர மேலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாத்தளை, அம்பாறை, பதுளை, அநுராதபுரம், குருநாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

நாட்டில் மேலும் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமையானது 2 நாட்களுக்கு முன்பு கிடைத்த பெறுபேறுகள் பிரகாரமே அது பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி இதன்போது குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஆனால், COVID 19 தொற்றுக்குள்ளான தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவரின் உறவினரான குறித்த பெண தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் போது ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதன்போது விளக்கமளித்துள்ளார்.

========================================================================

நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்