ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு பிணை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

08 Oct, 2020 | 9:20 am

Colombo (News 1st) அமெரிக்க பிரஜை ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மில்லியன் டொலர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோர்ஜ் ப்ளொய்ட் எனும் கறுப்பினத்தவர் குறித்த பொலிஸ் அதிகாரியால் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கழுத்து நெறித்து கொல்லப்பட்டார்.

குறித்த பொலிஸ் அதிகாரி, ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் கழுத்தை தனது காலால் நெறிக்கும் சுமார் 30 நிமிட காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்