சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 08-10-2020 | 5:41 PM
Colombo (News 1st) தற்போதைய சவால்மிகுந்த தருணத்தில் சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். சிலர் பகிரும் வதந்திகளால் ஏமாறாமல், அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் தேவையான தகவல்களை அறிந்துகொள்ளுமாறும் ஜனாதிபதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
COVID-19 தொற்று முழு உலகையும் ஆக்கிரமித்திருந்த தருணத்தில், ஒரு வலுவான தேசமாக ஒன்றிணைந்து நாம் அதனைக் கட்டுப்படுத்தினோம். இன்று, COVID-19 தொற்று மீண்டும் எம் நாட்டில் தலைதூக்கியுள்ளது. முன்னரைப் போலவே, இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களைக் காக்க சுகாதார, பாதுகாப்பு சேவைகள் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன
என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்