கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 5:22 pm

Colombo (News 1st) கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் சேவைகளைப் பெற வௌியில் இருந்து செல்வோருக்கு இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவி வரும் COVID-19 தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை பொதுமக்களுக்கான சேவைகள் நிறுத்தப்படுவதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கம்பனிகளை பதிவு செய்தல், சங்கங்களை பதிவு செய்தல், பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இணையவழி ஊடாக வழங்கப்படுமென கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளை கம்பனிகள் திணைக்களத்தின் www.drc.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக,

கம்பனிகளை பதிவு செய்துகொள்வதற்கு 011 – 268 96 16 என்ற இலக்கத்திற்கும்

பொது ஒப்பந்தங்களை பதிவு செய்வதற்கு 011 – 268 92 15 என்ற இலக்கத்திற்கும்

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சேவைகளுக்காக 011 – 268 92 39 என்ற இலக்கத்திற்கும்

அழைப்பை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்