ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான் முதற்தடவையாக சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான் முதற்தடவையாக சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2020 | 8:20 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முதற்தடவையாக சாட்சியமளித்தார்.

சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க ஆரம்பித்ததாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதனை ஊடகங்களில் பகிரங்கப்படுத்த வேண்டாம் எனவும் அவர் நீதிபதிகள் குழாத்திடம் கோரியிருந்தார்.

சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்த பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன இன்று இரண்டாவது நாளாகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கபில வைத்யரத்ன மூன்றாவது நாளாக சாட்சியமளிக்க வந்திருந்தார்.

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு நான்காவது நாளாகவும் சென்று இன்று வாக்குமூலமளித்தார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு சென்ற ரிஷாட் பதியுதீன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் அளித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்