சிரிய போர்; கார்க்குண்டு தாக்குதலில் 19 பேர் பலி

சிரிய போர்; கார்க்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 07-10-2020 | 1:16 PM
Colombo (News 1st) சிரியாவிலுள்ள துருக்கியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் பொது மக்கள் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வட பகுதியில் அமைந்துள்ள Al-Bab பகுதியில் பஸ் நிலையத்துக்கு அருகே இந்த வெடிச்சம்பம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த ஆண்டு துருக்கி எல்லையை அண்மித்த சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கி படையினர் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாகவே சிரியாவின் வட பகுதி துருக்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 இலட்சம் மக்கள் சிரியாவின் வட பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதுடன் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.