வௌ்ளை மாளிகை ஆலோசகருக்கு கொரோனா தொற்று

வௌ்ளை மாளிகை ஆலோசகருக்கு கொரோனா தொற்று

வௌ்ளை மாளிகை ஆலோசகருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Oct, 2020 | 9:58 am

Colombo (News 1st) அமெரிக்க வௌ்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் (Stephen Miller), கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வௌ்ளை மாளிகைக்கு திரும்பிய, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடமைகளை மீள ஆரம்பித்துள்ளார்.

தற்காலிகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகத்திலிருந்து அவர் தமது கடமைகளை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை 7,722,746 பேருக்கு COVID – 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 2,15,822 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்