மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கண்டனம்

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டமைக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2020 | 7:34 pm

Colombo (News 1st) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டமைக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கண்டனம் வௌியிட்டார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளரை மாற்றி இரண்டாவது பதவி நிலையில் அமர வைத்திருப்பது பண்பான செயல் அல்லவென முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கான தகைமை உள்ளவரை ஓரங்கட்டிவிட்டு, குறைந்தளவு தகைமை உள்ள ஒருவரையே நியமித்துள்ளதாக தேரர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்