ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை: மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை: மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து சாட்சியம்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை: மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

07 Oct, 2020 | 5:56 pm

Colombo (News 1st) முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க துபாயிலிருந்து காணொளி ஊடாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பேரவை தொடர்பில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லையென அவர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவையின் சந்திப்புகள் ஆரம்பமாகி முதல் 5 அல்லது 10 நிமிடங்களில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டத்தில் இருந்து வெளியேறிவிடுவதாகவும் அவருடன் அப்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகக் கடமையாற்றிய சாகல ரத்நாயக்கவும் வௌியேறிவிடுவதாகவும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்