பரீட்சைகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை

A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை

by Staff Writer 06-10-2020 | 2:04 PM
Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் 12 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 11 ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் குறித்த இரு நாட்களிலும் பரீட்சையை நாட்டதுவது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மேற்கொள்ளப்படும் என மைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பெறப்பட்டுள்ள பீ.சீ.ஆர் மாதிரிகளின் அறிக்கை நாளை கிடைத்ததன் பின்னரே பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைக் குறித்து மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைய பகுதி அளவில் அல்லது பிதேச ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்