T20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

by Bella Dalima 06-10-2020 | 3:39 PM
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணித் தலைவர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட்கோலி 43 ஓட்டங்களைப் பெற்றார். 10 ஓட்டங்கள் எடுத்தபோது, அவர் 20 ஓவர் போட்டியில் 9,000 ஓட்டங்களைத் தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ஓட்டங்களைக் குவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 9,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சர்வதேச அளவில் 7-வது வீரராகவுள்ளார். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9,000 ஓட்டங்களை எடுத்த வீரர்கள்:- 1. கிறிஸ்கெய்ல் (மேற்கிந்தியத் தீவுகள்)-13,296 ஓட்டங்கள் 2. போல்லார்ட் (மேற்கிந்தியத் தீவுகள்)- 10,370 ஓட்டங்கள் 3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ஓட்டங்கள் 4. மெக்கல்லம் (நியூசிலாந்து)- 9922 ஓட்டங்கள் 5. டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)- 9451 ஓட்டங்கள் 6. ஆரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா)- 9646 ஓட்டங்கள் 7. விராட் கோலி (இந்தியா) - 9033 ஓட்டங்கள்