by Staff Writer 06-10-2020 | 1:17 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான வழக்கு விசாரணைகளை காணொளி தொழில்நுட்பமூடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகள் தொடர்பில் நீதிபதிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்து, நீதிபதியின் அனுமதிக்கு அமைய தேவையான கைதிகளை மாத்திரம் காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னிலைப்படுத்துாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மறு அறிவித்தல் வரை நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்வையிட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.