by Staff Writer 06-10-2020 | 8:47 AM
Colombo (News 1st) கஹதுடுவ - ஹெரலியாவல பகுதியில் T 56 ரக துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 4 T 56 ரக துப்பாக்கிகள், 2 மெகசின்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மையில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரத்மலான ரொஹாவுக்கு சொந்தமான ஆயுதங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்மலானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஆயுதங்கள், பழைய பத்திரிகைகளை சேகரிக்கும் இருவரால் கஹதுடுவ, ஹெரலியாவல பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 38 மற்றும் 49 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவரும் மது போதைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.