by Bella Dalima 06-10-2020 | 7:05 PM
Colombo (News 1st) பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் ஜயருவன் பண்டார அந்த பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்று செய்தி வௌியானது.
இதற்கமைய, குறித்த நிறுவனத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றிய டொக்டர் பிரபாத் அமரசேகர புதிதாக அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம் இன்று முதல் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளராக கடமையாற்றவுள்ளதாக டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.