தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

by Staff Writer 06-10-2020 | 7:01 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். 3 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஏனைய பகுதி மக்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் அவர் கூறியுள்ளார். நோய் அறிகள் தென்படும் பட்சத்தில் அது குறித்து மறைக்காது வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எவரேனும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஊரடங்கு சட்டம் தொடர்பில் போலி பிரசாரங்களைப் பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளதார் நேற்றைய தினம் போலி பிரசாரம் செய்த நபர் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேநேரம், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற உண்மைக்கு புறம்பான பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களை தௌிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அல்லது அரச தகவல் திணைக்களம் விடுக்கும் விசேட அறிக்கைகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரம் பிரசுரிக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.