சுகாதார ஆலோசனைக்கு அமைய பொது போக்குவரத்து 

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை 

by Staff Writer 06-10-2020 | 11:01 AM
Colombo (News 1st) பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முகக்கவசமில்லாத பயணிகளை பஸ்களில் ஏற்ற வேண்டாம் என அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, பஸ்களில் கிருமி ஒழிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா கூறியுள்ளார். இதேவேளை, இன்றும் வழமை போன்று ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பயணிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ, பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதேநேரம், ரயில்களில் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதையும் யாசகர்களுக்கு பணம் வழங்குவதையும் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.