நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிக்க அனுமதி

உத்தேச செலவுகள் அடங்கிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 06-10-2020 | 8:53 PM
Colombo (News 1st) அரசாங்க செலவிற்காக 4,906 பில்லியன் ரூபாவுடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் உத்தேச செலவுகள் அடங்கிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் நாளாந்த செலவு 2,690 பில்லியன் ரூபாவாகவும் மூலதன செலவு 1,146 பில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் விதிமுறைகளை உள்ளடக்கியதாக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, 2020 நிதியாண்டிற்கான இரண்டு இடைக்கால கணக்கறிக்கை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களின் படி செலவு மதிப்பீடுகளையும் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.