அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் என அறிவுறுத்தல்

அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

by Bella Dalima 06-10-2020 | 5:29 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை பகுதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அநாவசியமாக ஒன்றுகூட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் இந்த அறிவிப்பு அமுலாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, மாநாடுகள், சொற்பொழிவுகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை நடத்த முடியாது என அவர் கூறியுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நிலைமைக்கு அமைய, இந்த அறிவிப்பில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.