பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும்: திலும் அமுனுகம

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2020 | 6:29 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை நாட்டில் மீண்டும் அமுல்படுத்தினால் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பஸ்களின் ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்லும் போது அதிகக் கட்டணம் அறவிட வேண்டும் எனும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, தனியார் மற்றும் அரசாங்க பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் போது பாரிய நட்டம் ஏற்படும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் 48 அல்லது 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது போகும் பட்சத்தில், கலந்துரையாடல் ஊடாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்