கிர்கிஸ்தான் தேர்தலில் மோசடி: பாராளுமன்றம் முற்றுகை

கிர்கிஸ்தான் தேர்தலில் மோசடி: பாராளுமன்றம் முற்றுகை

கிர்கிஸ்தான் தேர்தலில் மோசடி: பாராளுமன்றம் முற்றுகை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

06 Oct, 2020 | 10:52 am

Colombo (News 1st) மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் (Kyrgyzstan) தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தானில் நேற்று முன்தினம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் 98.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

120 ஆசனங்களில் 61 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், காகிதங்களை கிழித்தெறியும் காட்சி மற்றும் அலுவலகத்தின் மற்றைய பகுதிகளில் தீ பரவியுள்ள காட்சிகளும் வௌியாகியுள்ளன.

போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்