காஜல் அகர்வாலுக்கு திருமணம்

காஜல் அகர்வாலுக்கு திருமணம்

காஜல் அகர்வாலுக்கு திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

06 Oct, 2020 | 4:31 pm

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு ஒக்டோபர் 30 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால்.

தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் – படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒக்டோபர் 30 ஆம் திகதி தொழிலதிபர் கெளதமை அவர் மணக்கவுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்தும் நடிக்கவுள்ளதாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்