ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் சில தினங்களுக்கு இடைநிறுத்தம் 

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் சில தினங்களுக்கு இடைநிறுத்தம் 

ஒரு நாள் சேவை அடையாள அட்டை விநியோகம் சில தினங்களுக்கு இடைநிறுத்தம் 

எழுத்தாளர் Staff Writer

06 Oct, 2020 | 12:18 pm

Colombo (News 1st) ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 09 ஆம் திகதிகளில் தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஆட்பதிவு திணைகளத்தில் முன்னெடுக்கப்படும் சாதாரன சேவைக்கான நடவடிக்கைகள் வழமைபோல இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்