by Staff Writer 06-10-2020 | 9:40 AM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வேயங்கொட பகுதியிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட, திவுலப்பிட்டிய மற்றும் வேயங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அந்தப் பகுதிகளுக்குள் செல்வது, அங்கிருந்து வௌியேறுவது மற்றும் அந்தப் பகுதிகளூடாகப் பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.