by Bella Dalima 06-10-2020 | 4:43 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் நஜீப் தரகாய் தனது அணிக்காக 12 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் கடந்த வௌ்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் வீதியைக் கடக்கையில் கார் விபத்தில் சிக்கினார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.