பண மோசடி தொடர்பில் 37 பேர் கைது

பண மோசடி தொடர்பில் 37 பேர் கைது

by Staff Writer 05-10-2020 | 3:02 PM
Colombo (News 1st) ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் ஊழல் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.