இடிந்து வீழ்ந்த கட்டட ஆய்வுக்காக 21 பேர்

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய குழு

by Fazlullah Mubarak 05-10-2020 | 11:25 AM

கண்டியில் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பிலான ஆய்வுகளுக்காக 21 பொறியியலாளர்கள்அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில், பல பாடசாலை கட்டடங்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கட்டடங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த காலப்பகுதியில் சுமார் 20 கட்டடங்களையேனும் ஆய்வுக்குட்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன்பின்னர், கண்டி நகரில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் கட்டடங்களை எவ்வாறு நிர்மாணிப்பது என்பது தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படும் எனவும் ஆளுநர் லலித் யு கமகே மேலும் தெரிவித்துள்ளார்.