ஹெரோயினுடன் மூதாட்டியும் பேத்தியும் கைது

அநுராதபுர நீதிமன்ற வளாகத்தில் ஹெரோயினுடன் மூதாட்டியும் பேத்தியும் கைது 

by Staff Writer 05-10-2020 | 4:59 PM
Colombo (News 1st) 31 ஹெரோயின் பக்கெற்களுடன் மூதாட்டி மற்றும் அவரது பேத்தி ஆகியோர் அநுராதபுரம் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் அநுராதபுரம் - கிரவஸ்திபுர, திம்பிரிகடல பகுதியை சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.