சுகாதார வழிமுறைகளுக்கு அமைய போக்குவரத்து

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய போக்குவரத்து

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய போக்குவரத்து

எழுத்தாளர் Fazlullah Mubarak

05 Oct, 2020 | 11:30 am

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய போக்குவரத்தை முன்னெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பஸ் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

கொரோன தொற்று தொடர்பில் வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, முகக்கவசம் அணியாதவர்கள் பஸ்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்