முழுமைபெறாத வீதிகளை RDA மீண்டும் பொறுப்பேற்பு

முழுமைபெறாத வீதிகளை மீண்டும் பொறுப்பேற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை

by Staff Writer 04-10-2020 | 9:29 AM
Colombo (News 1st) ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், பணிகள் நிறைவடையாதிருக்கும் வீதிகளை கண்டறிந்து அவற்றை தாம் பொறுப்பேற்று வீதி பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வீதிகள் காணப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. A மற்றும் B பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளும் கிராம மற்றும் தோட்டப்புறங்களிலுள்ள வீதிகளிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. உரிய வகையில் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யாத ஒப்பந்தக்காரர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அமைச்சரிடம் வழங்கவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.