கிளிநொச்சியை சேர்ந்த பூசகர் யாழ்ப்பாணத்தில் கொலை

கிளிநொச்சியை சேர்ந்த பூசகர் யாழ்ப்பாணத்தில் கொலை

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2020 | 3:33 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – கனகாம்பிகை குளம் பகுதியை சேர்ந்த பூசகர் ஒருவர் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, 07 ஆம் வட்டாரம் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத சிலரால் இவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அதிகாலை 1.30 அளவில் பொலிஸ் அவசரப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

33 வயதான பூசகர் ஒருவரே வீட்டில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், யாழ். சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பூசகரின் வீட்டில் பொருத்தியுள்ள CCTV கமராக்களின் சேமிப்பு கருவியையும் சந்தேகநபர்கள் கழற்றிச் சென்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்