கிராமங்களிலுள்ள மாணவர்களுக்கு சர்வதேசத்தின் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்கும் புதிய முயற்சி

by Staff Writer 02-10-2020 | 4:46 PM
Colombo (News 1st) கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சர்வதேசத்தின் தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய வேலைத்திட்டத்தை மக்கள் சக்தி இன்று ஆரம்பித்தது. மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெக் பஸ் ( TEC BUS) என்ற செயலி தொடர்பான தகவல்களை பஸ் ஒன்றினூடாக கிராமங்களுக்கு சென்று மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு அநுராதபுரம் - மஹவிலச்சி தக்ஷிலா மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் கிராமங்களிலுள்ள மாணவர்களை தௌிவுபடுத்தும் நோக்கில் மக்கள் சக்தியினால் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானம் மற்றும் செயற்கை அறிவு உள்ளிட்ட விடயங்களை மாணவர்களிடையே தௌிவுபடுத்துவதே இந்த புதிய செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.