கொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது

கொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது

கொள்ளுப்பிட்டியில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தமை தொடர்பில் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2020 | 4:34 pm

Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கி 5 ஆவது மாடியிலிருந்து தள்ளி விட்டமை தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பசறை, கடவத்தை மற்றும் அஹங்கம பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரை கொலை செய்துவிட்டு, பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்