அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2020 | 3:32 pm

Colombo (News 1st) அமெரிக்க அதிபர் டரம்பின் நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த புதன்கிழமை நடந்த பிரசாரப் பேரணியின் போது ட்ரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில், இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்