by Staff Writer 01-10-2020 | 5:26 PM
Colombo (News 1st) கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தேங்காய் மற்றும் அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த 364 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்வோரை அடையாளம் காணும் நோக்கில் 210 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று மாத்திரம் 20 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேய்காய்க்கான நிர்ணய விலை கடந்த வௌ்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தேங்காயை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத 154 வர்த்தகர்கள், கடந்த 03 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.
தேங்காய் மற்றும் அரிசியை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் நோக்கில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.