சமாதான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

ஆர்மேனிய - அஸர்பைஜான் மோதல்: சமாதான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

by Chandrasekaram Chandravadani 01-10-2020 | 12:28 PM
Colombo (News 1st) ஆர்மேனியா மற்றும் அஸர்பைஜானுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான வாய்ப்பினை ரஷ்யா வழங்கியுள்ளது. நகோர்னோ கராபக் (Nagorno Karabakh) பிராந்தியத்தின் உரிமம் தொடர்பில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்களை, நிறுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்மேனிய, அஸர்பைஜான் வௌிவிவகார அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை விடுத்ததாக ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இடம்பெற்றுவரும் உக்கிரமான போரில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நகோர்னோ கராபக் பிராந்தியம், அஸர்பைஜானுக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் 1994 ஆம் ஆண்டிலிருந்து அதனை ஆர்மேனியர்கள் ஆளுகை செய்துவருகின்றனர். குறித்த பிராந்தியத்திற்கு உரிமை கோரி 1988ஆம் ஆண்டு தொடக்கம் 1994 வரை போர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.