நீர்வேலியில் வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயம்

நீர்வேலியில் வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயம்

நீர்வேலியில் வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2020 | 8:58 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நீர்வேலியில் நேற்று (30) இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நீர்வேலி சந்திக்கு அருகிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான தாயும் மகனும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் வீட்டில் இருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்