கொரோனா நோயாளர்களின் தொகை அதிகரிப்பு: ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

கொரோனா நோயாளர்களின் தொகை அதிகரிப்பு: ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

கொரோனா நோயாளர்களின் தொகை அதிகரிப்பு: ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2020 | 9:10 am

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஸ்பெய்னின் தலைநகர் மட்ரிட் (Madrid) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை மீண்டும் முடக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் ஸ்பெயினின் மட்ரிட் நகரில் 133,604 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக அங்கு 769,000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 31,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களை வௌி பிரதேசங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேருக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்து 46 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்