ஒலுவிலில் ஹெரோயின் விற்பனை தொடர்பில் மூவர் கைது

ஒலுவிலில் ஹெரோயின் விற்பனை தொடர்பில் மூவர் கைது

by Staff Writer 01-10-2020 | 9:52 AM
Colombo (News 1st) அம்பாறை - ஒழுவில் பகுதியில் ஹெரோயின் விற்பனை தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 கிராம் ஹெரோயினை முச்சக்கரவண்டியில் வைத்திருந்தபோது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உதவி புரிந்தமை தொடர்பில் ஏனைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். போதைப்பொருள் விற்பனையில் திரட்டிய 19,000 ரூபா பணமும் சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலமுனை, மருதமுனை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்