பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வௌியானது

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை

by Bella Dalima 30-09-2020 | 5:30 PM
Colombo (News 1st) 1992 இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். லக்னௌ நகரில் உள்ள CBI சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சதித்திட்டம் தீட்டி பாபர் மசூதியை இடிக்க ஆயிரக்கணக்கானவர்களைத் தூண்டி விட்டதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் சமூகக் குழுக்களிடையே பகைமையைத் தூண்டியதாகவும் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த 49 பேரில் தற்போது 32 பேர் மாத்திரமே உயிருடன் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து CBI தரப்பு மேன்முறையீடு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.