ட்ரம்ப் - ஜோ பைடன் இடையில் நேரடி விவாதம்

டொனால்ட் ட்ரம்ப் - ஜோ பைடன் இடையிலான நேரடி விவாதம் இன்று

by Chandrasekaram Chandravadani 30-09-2020 | 8:42 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான நேரடி தொலைக்காட்சி விவாதம் இன்று (30) இடம்பெறவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நேயர்களுடன் இந்த விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் தருணத்தில் 100 மில்லியனுக்கும் அதிக நேயர்கள் கண்டுகளிப்பார்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஒகாயோ பிராந்தியத்தில் நடைபெறவுள்ள இந்த விவாதம் 6 அடிப்படை அம்சங்களுடன் 90 நிமிடங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகின்றது. இதேவேளை, ஜோ பைடன் மற்றும் அவரது உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிசன் ஆகியோர் தமது வருமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.​